மருந்துகளை பெற்றுக் கொள்ள 2 தொலைப்பேசி இலக்கங்கள்!

தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மருந்துகளை பெற்றுக் கொள்வதற்காக அந்தந்த வைத்தியசாலைகளினால் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக இரண்டு தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் விந்தியா குமாரபேலி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதன்படி, 0720-720 720 அல்லது 0720-60 60 60 என்ற இலக்கங்களுக்கு அழைக்க முடியுமென விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருந்துகளை பெற்றுக் கொள்வதை போன்று சிறந்த வாழ்க்கை முறையை பராமரிப்பது முக்கியமாகும் என இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleகிளிநொச்சி நகரப்பகுதியும் முற்றாக முடங்கியது!
Next articleஇன்றிரவு 8.30 மணிக்கு மற்றுமோர் அறிவிப்பு!