ஊரடங்கு காலப்பகுதியில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது எப்படி?

ஊரடங்கு அமுலில் உள்ள காலப் பகுதியில், கோவிட் தடுப்பூசி திட்டம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலப் பகுதியில் தடுப்பூசி வழங்குகின்றமை குறித்து கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தடுப்பூசியில் இரண்டாவது மருந்தளவை (DOSE) செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள், அந்தந்த தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தில் இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்துப் பார்த்ததில் 201 பேருக்கு டெல்டா பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் சமூகத்தில் இருக்கலாம் என்கின்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.