இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது!

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை), இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், இந்தியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்திருந்தன.

இதில், சென்னையில் இருந்து 40 தொன் மருத்துவ ஒட்சிசனை ஏற்றிவந்த கப்பல், நேற்று இரவு இலங்கையை வந்தடைந்து விட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம், தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement