வீதியில் திரிந்தவர்களிற்கு அன்டிஜன் பரிசோதனை: இருவருக்கு தொற்று

ஊரடங்கு அல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் உலாவித் திரிந்தவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரின் முக்கிய பகுதிகளில் உலாவித் திரிபவர்களிற்கு சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரின் ஏற்பாட்டில் இன்று (21) காலை அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ஏ9 வீதியில் நீதிமன்றத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதனையடுத்து குறித்த இருவரையும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து செல்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.