அணைத்து சுகாதாரத் துறையினருக்கு 3ஆவது டோஸ்!

சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் 3 ஆவது டோஸ் பெற்றுக் கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுகாதார பிரிவினர் அதிகளவில் தொற்றுக்கு உள்ளாகும் நிலைக் காணப்படுகிறது.

இதன் காரணமாக அவர்களுக்கு 3ஆவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இச் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

2ஆவது தடுப்பூசியை பெற்று 5 மாதங்களின் பின்னர் 3ஆவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

Previous articleவீதியில் திரிந்தவர்களிற்கு அன்டிஜன் பரிசோதனை: இருவருக்கு தொற்று
Next articleமட்டு கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலில் குடுமபஸ்தர் பலி !