மட்டு கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலில் குடுமபஸ்தர் பலி !

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் யானைத்தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்த சம்பம் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு இம்பெற்றுள்ளதாக கரடியானாறு பொலிசார் தெரிவித்தனர்.

கரடியனாறு கூமாச்சோலை சந்தி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய கோணேசப்பிள்ளை சிறிராம் ஜீவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளர்ர்.

குறித்த பகுதியில் நேற்று இரவு காட்டு யானைகள் ஊருக்குள் உட்புகுந்து தென்னை மரங்களை முறித்து நாசப்படுத்தியதுடன் அந்த பகுதியிலுள்ள ஒருவரை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

இதனையடுத்து குறித்த சடலத்தை பிரேதபரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.