உறவினர் வீட்டுக்கு சென்ற சிறுமி மாயம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுமி ஒருவர் உறவினர் வீட்டுக்கு ஆடை தைப்பதற்காக சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் அம்மம்மா முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு புளியடி வீதியைச் சோந்த 16 வயதுடைய சிறுமியான தவராசா சசீக்கா என்பவரே காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமியும் அவரது சகோதரியும் அவர்களுடைய அம்மம்மா பராமரிப்பில் வாழ்ந்து வருகின்ற நிலையில் சம்பவதினமான புதன்கிழமை (18) சிறுமியின் சகோதரி வேலைக்கு சென்ற நிலையில் பிற்பகல் 1.30 மணியளவில் உறவினரின் வீட்டில் ஆடை தைப்பதற்கு செல்வதாக அம்மம்மாவிடம் தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் இரவாகியும் சிறுமி வீடு திரும்பாததை அடுத்து அவரை தேடியபோதும் கண்டு பிடிக்கமுடியவில்லை எனவும் சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் அம்மம்மாவினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமட்டு கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலில் குடுமபஸ்தர் பலி !
Next articleஒரு வார முடக்கத்தில் பயனில்லை – 3 வாரங்கள் முடக்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்