காட்டுக்குள் பிக்குவின் களியாட்டம்; வெளியான பரபரப்பு காணொளி

தென்னிலங்கையில் பௌத்த துறவி ஒருவரின் மோசமான செயற்பாடு தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அகிம்சையை போதிக்கும் பௌத்த துறவி மதுபானம் அருந்தும் காணொளியே இவ்வாறு வெளியாகி உள்ளது.

கொவிட் வைரஸ் பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் குறித்த துறவி பொதுவெளியில் இன்னொருவருடன் மதுபானம் அருந்துவது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், பிக்குவின் செயற்பாட்டை கண்டித்ததுடன் அவரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

Advertisement

இவரின் செயற்பாடு பௌத்த மதத்திற்கு பெரும் அவமானம் என தென்னிலங்கை மக்கள் பலரும் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.