மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு ஓடும்போது விபத்தில் சிக்கிய திருடன்!

வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு ஓடிய திருடன் விபத்தில் சிக்கிய சம்பவம் கிளிநொச்சி – புளியம்பொக்கணை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

புளியம்பொக்கணை – முசுரம்பிட்டி பகுதியில் வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் நேற்றய தினம் திருடப்பட்டது. திருடிய மோட்டார் சைக்கிளுடன் தப்பி ஓடிய திருடன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து திருடனை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர். மேலும் குறித்த திருடன் கடந்த ஒருவாரத்திற்கு மன்னர் திருடிய மோட்டார் சைக்கிளுடன் பருத்தித்துறையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மோட்டார் சைக்கிள் திருடி மாட்டியுள்ளார்.

Advertisement