யாழில் இரவுவேளை விபத்து: இருவர் வைத்தியசாலையில்

யாழ். காக்கைதீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விபத்து சம்பவம் நேற்று (11) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து தெரியவருவது, காக்கைதீவு பிரதான வீதியால் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் இருவரது கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனையடுத்து, 1990 இலக்க அவசர நோயாளர் காவுவண்டி மூலம் அவர்கள் இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.