இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம்

இந்த வாரத்திற்காக அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் முற்பகல் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கு முன்னர் அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை வேளையில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையிலேயே இந்த வாரம் வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இவ்வாறு இன்றைய தினம் முற்பகல் அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleயாழில் இரவுவேளை விபத்து: இருவர் வைத்தியசாலையில்
Next articleஒரே நாடு – ஒரே சட்டம் என்ற குழுவை உடனே கலைக்கவும்! – ஜனாதிபதியிடம் சிவாஜிலிங்கம் வலியுறுத்து