இந்திய மீனவர்கள் 23 பேர் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலை

அண்மையில் கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் சற்று முன்னர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த 23 பேருமே சிறைச்சாலை அதிகாரிகளால் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே இன்று அவர்கள்‌ பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று இணைய வழியில் விசாரணைகள் இடம்பெற்றிந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇரண்டு வருடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை! 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விபரம் இதோ!
Next articleயாழில் பேருந்து நிலையத்தில் தனித்து நின்ற சிறுமியின் வாக்குமூலம்: வசமாக சிக்கிய இரு இளைஞர்கள்