யாழில் இளைஞரொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் வசிக்கும் இளைஞரொருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர் தனது வீட்டுப் படலையில் நின்றவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் குறித்த இளைஞரது கையில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 23 வயதான குறித்த இளைஞன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleயாழில் பேருந்து நிலையத்தில் தனித்து நின்ற சிறுமியின் வாக்குமூலம்: வசமாக சிக்கிய இரு இளைஞர்கள்
Next articleதண்ணீரில் பாய்ந்த மின்சாரம்… 6-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்..!