வாகன இறக்குமதி தொடர்பில் வெளிவந்த தகவல்…!

இலங்கையில் பயன்படுத்திய வாகனங்களின் விலை மீண்டும் பாரிய அளவு அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.எதிர்வரும் வருடமும் வாகனம் இறக்குமதி செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்திருந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தையடுத்து வாகனங்கள் கொள்வனவு செய்யும் எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு மேலும் சில காலங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பயன்படுத்திய மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கும் நபர்களுக்கும் இதுவரையில் கடுமையான நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளனர்.

இலங்கையர்கள் அதிகமாக பயன்படுத்தும் எல்டோ ரக மோட்டார் வாகனம் மிகவும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

உதாரணமாக 2015ஆம் ஆண்டில் வெளியான எல்டோ வாகனம் தற்போது 30 லட்சம் ரூபாய்க்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றதுஜப்பான் வாகனங்கள் பல மடங்கு விலை அதிகரித்துள்ளதென தெரியவந்துள்ளது. அத்துடன் வாகனங்களின் உதிரிபாகங்களின் விலைகளும் பாரிய அளவு அதிகரித்துள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

Previous articleயாழில் சோகம் – மாங்காய் பிடுங்கும்போது தவறி விழுந்த குடும்ப தலைவர் உயிரிழப்பு….!
Next articleயாழில் 21 வயது இளைஞனுடன் ஓடிய 34 வயது அன்ரி!! வலை வீசி தேடும் கணவன்!!