இன்றைய மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி அமைச்சு வெளியிட்ட அறிக்கை…!

இன்றும் நாட்டின் சில பிரதேங்களில் மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அரை மணித்தியாலத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில், மின் கட்டமைப்பினை இணைக்கும் வரை, இந்த மின் விநியோகம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

அதேவேளை நாளைய தினமும் மின் விநியோகம் துண்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் வீதியில் உள்ள கால்வாய் ஒன்றில் சிறுவர்களின் தூண்டிலில் சிக்கிய குண்டு….!
Next articleஜேர்மனியில் கொரோனாக் கட்டுப்பாட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! பொலிஸார் மீது தாக்குதல்!!