மின்சார தடையில் இருந்து இலங்கைக்கு விடுதலை…!

இன்று முதல் நாட்டின் எந்த பகுதிகளிலும் மின்சார தடை ஏற்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மின்பிறப்பாக்கியை வழமைக்கு கொண்டு வரும் தொழிற்பாடுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக, மின்சார சபை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் தொழிற்பாடுகள் வழமைக்கு திரும்பும் வரையில் நாட்டின் சில பிரதேசங்களில் மாலை 6 மணி முதல் 9.30 வரையான காலப்பகுதியில் அரை மணிநேரம் மின்சார தடை ஏற்படுத்தப்படுத்தப்பட்டு வந்தது.

இவ்வாறான நிலையில் , இன்று மின்சாரத் துண்டிப்பு இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய மலசலகூடத்தில் இப்படி ஒரு அவலம்!
Next articleயாழில் கடற்படையினரின் வாகனம் மீது கல்வீச்சு…..!