ஓமிக்ரோன் தொற்றின் 5 முக்கிய அறிகுறிகள் எச்சரிக்கை தகவல்….!

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரோன் தொற்று பாதிப்புகள் தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகின்றன. மேலும் இதுகுறித்து பல எச்சரிக்கை தகவல்களை உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் omicron தொற்று தொடர்பான இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் இருப்பது அவசியம். ஓமிக்ரோன் அறிகுறிகளின் இந்த அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

தொண்டை அரிப்பு : தென்னாப்பிரிக்க வைத்தியர் ஏஞ்சலிக் கோட்ஸி இது குறித்து கூறுகையில், ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொண்டை புண்க்கு பதிலாக தொண்டை அரிப்பு போன்ற பிரச்சனையைப் எதிர் கொண்டுள்ளதாக கூறினார். இந்த இரண்டு தொண்ட பிரச்சனைகளும் ஒரு அளவிற்கு ஒத்ததாக இருந்தாலும், தொண்டை அரிப்பு பிரச்சனை இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

சோர்வு : முந்தைய தொற்று மாறுபாடு வகைகளைப் போலவே, ஓமிக்ரோன் சோர்வு அல்லது தீவிர சோர்வை ஏற்படுத்தலாம். சோர்வு மற்ற காரணங்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளாலும் ஏற்படலாம் என்றாலும், ஓமிக்ரோன் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால், இதனை அலட்சியப்படுத்தாமல், மருத்துவரி ஆலோசனையை பெற மறக்காதீர்கள்.

மிதமான காய்ச்சல் : கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து லேசானது முதல் மிதமான காய்ச்சல் என்பது தொற்று அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் ஓமிக்ரோனில் காய்ச்சல் லேசான காயச்சலாக இருக்கும் என்றாலும் பல நாட்கள் நீடிக்கும்.

வறட்டு இருமல் : ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வறட்டு இருமல் இருக்கலாம் என தென்னாப்பிரிக்கா சுகாதாரத் துறை கூறியுள்ளது. உங்கள் தொண்டை வறண்டு போகும் போது அல்லது தொற்று காரணமாக தொண்டையில் ஏதாவது சிக்கியிருப்பதை போல் உணரும் போது வறட்டு இருமல் ஏற்படுகிறது.

இரவில் வியர்த்தல் : இரவில் வியர்ப்பதும் Omicron தொற்று நோயின் அறிகுறிகளாகும் என தென்னாப்பிரிக்காவின் சுகாதாரத் துறையின் வைத்தியர் அன்பன் பிள்ளை கூறுகிறார். இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஏசி அறையில் அல்லது குளிர்ச்சியான இடத்தில் தூங்கினாலும் அவருக்கு அதிக அளவில் வியர்வை ஏற்படுகிறது என்கின்றனர்.