சீனத்தூதுவர் பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்…!

சீனத்தூதுவர் கீ சென்ஹொங் இன்று (15) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதையடுத்து அவரது வருகைக்காக வவுனியாவில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
சீனாவின் தூதுவர் கீ சென்ஹொங் சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட மீனவர்களிற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று வடக்கிற்கு விஜயம் செய்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைகளின் தலைமையகத்திற்கு இன்று காலை வருகைதந்த அவர் அங்கிருந்து யாழ். நோக்கி பயணமானார்.

அவரது வருகைக்காக வவுனியா நகரப்பகுதி உட்பட பல்வேறு பகுதிகளிலும், வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

Previous articleயாழில் கும்பல் ஒன்று இளைஞன் ஒருவரை துரத்தித் துரத்தி வாள்வெட்டு!
Next articleயாழ்ப்பாணம் மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் மீண்டும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!