யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் மீண்டும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆனைக்கோட்டை – உயரப்புலம் பகுதியில் வசிக்கும், நல்லூர் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரது வீட்டில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.

நேற்று மாலை சுமார் 5.45 மணியளவில் வெடிக்க ஆரம்பித்த அடுப்பு இரவு 7.30 வரையும் வெடித்துக்கொண்டிருந்த நிலையில், தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்தித்திற்கு வந்து வெடிப்பினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும், மானிப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமைகளை பார்வையிட்டதாகவும் வீட்டினர் தெரிவித்தனர்.

Previous articleசீனத்தூதுவர் பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்…!
Next articleசிட்டிசன் படத்தை இயக்கிய சரவணா சுப்பையா படக்குழு இலங்கை கடற்படையால் கைது….!