ரயில் தண்டவாளத்தில் இருந்து மதுபானம் அருந்திய இளைஞனை ரயில் மோதியது…!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலுடன், இளைஞன் ஒருவர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். இவ்விபத்து சம்பவம் இன்று காலை , சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக, இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞனே படுகாயங்களுக்குள்ளானார். இவர், செவிப்புலன் அற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் ரயில் தண்டவாளத்தின் கீழிருந்து மதுபானம் அருந்தி கொண்டிருந்த பொழுது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ரயில், அவரை மோதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleசிட்டிசன் படத்தை இயக்கிய சரவணா சுப்பையா படக்குழு இலங்கை கடற்படையால் கைது….!
Next articleகொரோனா மரணத்தால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள புத்தலம் ….!