யாழில் சிலிண்டரை தொடர்ந்து லைட்டர்களும் வெடிக்க ஆரம்பித்தன – வியாபாரியின் மீசையும் கருகியது…!

அண்மைக்காலமாக நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் எரிவாயு அடுப்புகள் என்பன வெடித்து சிதறிய வண்ணம் உள்ளன. அதனடிப்படையில் யாழிலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகுகின்றன.

இந்நிலையில் நேற்றையதினம் புதன் கிழமை, சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் சிகரெட்டை பற்ற வைக்க முனைந்த போது அவரது கையிலிருந்த லைட்டர் வெடித்து சிதறியுள்ளது. இதனால் அவரது மீசையும் கருகியது.அத்துடன் நேற்றையதினம் சாவகச்சேரியில் முதியவர் ஒருவர் சுருட்டினை பற்ற வைக்க முயன்றபோது அவரது லைட்டரும் இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.

நாட்டில் நேற்றையதினம் (15) மாத்திரம் 25 எரிவாயு அடுப்புகள் வெடித்துச் சிதறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇன்று இரவு முதல் பெட்ரோல் விலை உயர்கிறதா அதிர்ச்சியில் மக்கள்….!
Next articleநீண்ட காலத்தின் பின்னர் யாழில் இனங்காணப்பட்ட மலேரியா நோயாளி…!