லண்டனில் பல தமிழர்களை தாக்கிய ஓமிக்ரோன் பாதிப்பு!

பிரித்தானியாவில் பல தமிழர்களுக்கு ஓமிக்ரோன் பாதிப்பு: தென்னாப்பிரிக்காவில் முதல் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய மாறுப்பாடான ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் தற்போது பிரித்தானியாவில் அதிகம் பரவ தொடங்கியுள்ளது.

இதேவேளை பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவலின் தாக்கமும் தீவிரமாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் லண்டனில் பல தமிழர்களுக்கு ஓமிக்ரோன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. தற்போது தலைவலி, லேசான தடிமன், வாந்தி எடுத்தல் மற்றும் இருமல் ஓமிக்ரோன வைரஸின் பரவலில் அறிகுறிகாளாக லண்டனில் காணப்படுகின்றது.

மேலும் காச்சல் பெரிதாக இருப்பதில்லை. இதேவேளை கொரோனா பரிசோதனை கருவியை பரிசோதித்து பார்த்து சில தமிழர்கள் தெரிவித்த விடயம் அதிர்ச்சியை தந்துள்ளது. எனெனில் அதில் சரியாக காட்டவில்லை என்பது தான்.

இதனால் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்ட போது ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் தொற்று என மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர். இந்நிலையில் லண்டனில் பல தமிழர்களுக்கு ஏற்கனவே Omicron வைரஸ் தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. வாந்தி எடுப்பதால். அஜீரணக் கோளாறு என்று நினைக்க வேண்டாம் அப்படி என்றால் அது ஓமிக்ரோன் தொற்றாக இருக்க வாய்ப்பு உண்டு.