மலிவான விஸ்கியை எடுத்துச் சென்று அதிக விலைக்கு விற்கும் சேவகர்கள்!

இறக்குமதி செய்யப்படும் ஒரு லீற்றர் விஸ்கிக்கு 4,000 ரூபா வரி விதிக்கும் இலங்கை சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட விஸ்கி போத்தல் ஒன்று இன்று (17-12-2021) சுங்கத் தலைமையகத்தில் தலா 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட விஸ்கியை இவ்வளவு குறைந்த விலைக்கு விற்று அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அரசு நிறுவனம் இதுபோன்ற செயலை செய்வது சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் உள்ள சுங்கத் தலைமையக ஊழியர்கள் இன்று விஸ்கியை எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர்களில் சிலர் மலிவான விஸ்கியை எடுத்துச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.