பெண் குழந்தையின் கன்னத்தை கடித்து சதையை மென்று தின்ற நபர்!

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 45 வயதான நபர் ஒருவர் 2 வயது பெண் குழந்தையின் கன்னத்தை கடித்து சதையை மென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரேல்லியில் உள்ள கிராமம் ஒன்றிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை சுனில்குமார் கூறியதாவது, நான் வீட்டிலிருந்த போது என் குழந்தையை நபர் ஒரு தாக்கிவிட்டதாகவும், அவர் போதையில் இருப்பது போல் தெரிவதாக தெரியவந்தது.

குழந்தையின் முகத்தில் இடது பக்கம் சதை இல்லாமல் இருந்தது. அந்த நபர் மிருகம் போல் குழந்தையை தாக்கியதாக அங்கிருந்தவர்கள் என்னிடம் கூறினர்.

என் குழந்தை மிகவும் பயந்துவிட்டார், அவரின் நிலைமை கவலைகிடமாக இருக்கிறது என கூறினார்.

குழந்தை வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, 45 வயதான நபர் குழந்தை மீது பாய்ந்து இறுக்கி பிடித்து கன்னத்தை கடித்து சதையை மென்றுள்ளார்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தடியால் அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் பின்னரே அவர் குழந்தையை தன் பிடியிலிருந்து வீட்டுள்ளார்.இதனையடுத்து, தந்தை சுனில்குமார் குழந்தையை விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

குழந்தைக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் தாக்கியதில் காயமடைந்த நபரும், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் Chedalal Gangwar என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வரும் அவரை வீட்டிற்குள் அடைத்து வைத்திருந்ததாகவும், எப்படியோ தப்பித்து வந்து குழந்தையை தாக்கிவிட்டதாக குடும்பத்தினர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.குழந்தையை தாக்கிய Chedalal Gangwar மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், அவரது நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை அளித்த உடன் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பவுள்ளதாக பரேல்லி SSP ரோகித் சிங் தெரிவித்துள்ளார்.

Previous articleபள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாப பலி….!
Next articleமாங்குளத்தில் கணவனை கொடூரமாக கொன்ற பெண் – பகீர் வாக்குமூலம்…!