தூண்டில் போட்டு மீன்பிடித்த 8 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து பலி….!

தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்த 8 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பருத்தித்துறை, திக்கம் நாச்சிமார் கோவிலடியில் இன்று இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த நியந்தன் ரித்திக்குமார் (வயது-8) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.சிறுவன் தோட்டக்காணியில் பட்டம் ஏற்றி விளையாடிவிட்டு சகோதரியுடன் இணைந்து தோட்டக்காணியில் உள்ள கிணற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது, கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

சம்பவத்தை ஓடிச் சென்று உறவினர்களிடம் சகோதரி தெரிவித்ததையடுத்து, உறவினர்கள் சென்று கிணற்றில் தேடிய போது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை ஆதார மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவராசா, சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமுருத்தெட்டுவே தேரருக்கு ஏற்பட்ட அவமானம்! – மாணவர்களுக்கு பாராட்டு….!
Next articleஇளம் பாடகி யொஹானிக்கு கொழும்பில் காணி வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முயற்சி!