தமிழ் மகளிர் மகா வித்தியாலயவில் மாணவி ஒருவர் காணவில்லை….!

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவி ஒருவர் மேலதிக வகுப்புக்காக சென்றிருந்த காணாமல்போயுள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயவில் தரம் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 17 வயதான லோகேஸ்வரன் லோஜினி என்ற மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

பதுளையில் உள்ள மேலதிக வகுப்பு ஒன்றிற்கு நேற்று முன்தினம் (19.12.202) சென்ற குறித்த மானவி வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மாணவி மேலதிக வகுப்பிற்கு எடுத்து சென்றதாக கூறப்படும் பாடசாலை புத்தகப்பை மற்றும் பாதணிகள் ஆகியன பதுளை – கோபோ பகுதியின் நீர் நிலையொன்றின் அருகே, (தெப்பக்குளம்) இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தோட்ட இளைஞர்கள் குழு ஒன்று, மேற்படி நீர் நிலையில் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இது வரை மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. பதுளை பொலிஸார் சுழியோடிகள் சகிதம், குறித்த நீர் நிலை பகுதிக்கு சென்றுள்ளனர்.

மேலும், குறித்த மாணவி குறிப்பிட்ட நீர் நிலையில் விழுந்து தற்கொலை செய்துள்ளாரா? அல்லது திசை திருப்பும் வகையில் அவரது புத்தகப்பை பாதணிகள் ஆகியவற்றை நீர் நிலை அருகில் போடப்பட்டு கடத்தப்பட்டாரா? என்ற வகையில் பொலிஸார் இரு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, குறித்த மாணவி தொடர்பில் தீவிர புலன் விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleமட்டக்களப்பில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த தந்தையும் – மகளும் சிக்கிய பின்னணி
Next articleநாட்டில் தற்போது மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது….!