கஞ்சா செடிகளை பயிரிட அனுமதி வழங்கிய மோல்டா (Malta) அரசாங்கம்….!

ஏழு கிராம் கஞ்சாவை வைத்திருக்கவும் தமது வீட்டுத் தோட்டத்தில் நான்கு கஞ்சா செடிகளை பயிரிடவும் மோல்டா (Malta) அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இது சம்பந்தமாக கடந்த வாரம் மோல்டா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட யோசனைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.

எனினும் பகிரங்கமாக கஞ்சா புகைக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதுடன் குழந்தைகளுக்கு எதிரில் கஞ்சாவை பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும் எனவும் மோல்டா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மோல்டா தெற்கு ஐரோப்பாவின் மத்திய தரைக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். ஏழு தீவுகளை கொண்ட இந்த நாட்டில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.