வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் கொந்தளித்த நோயாளி!

கடந்த (21.12-2021) திகதி முதல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையும் ஆதரவு வழங்கியுள்ளது.

இதேவேளை இன்று (23-12-2021) வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் இந்த போராட்டத்திற்கு எதிராக கொந்தளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பு ஆர்ப்பாட்டமானது வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று (23-12-2021) இடம்பெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் இடமாற்றச் சபையின் அனுமதியின்றி சுகாதார அமைச்சின் தன்னிச்சையான முடிவின் கீழ் மருத்துவப் பணிகளுக்கு புதிதாக வைத்தியர்களை பிழையான விதத்தில் நியமித்தமைக்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அதற்கு ஆதரவு வழங்கப்பட்டதுடன் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, சிகிச்சை சேவைகள் என்பன செயலிழந்து காணப்படுவதுடன் அவசர சேவைகள் என்பன இயங்கி வருகின்றன.

மேலும், வைத்தியர்களின் நீண்டகால கோரிக்கை குறித்து சுகாதார அமைச்சு மெத்தனமாக செயற்பட்டதால் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், சிகிச்சைக்காக கடந்த 2 தினங்களாக வைத்தியசாலைக்கு வந்திருந்த நோயாளி ஒருவர் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக ஏமாற்றுத்துடன் வீடு திரும்பியதுடன் மீண்டும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.

இதேவேளை, வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பு தொடர்வதை அடுத்து ஆத்திரமடைந்த நோயாளி வைத்தியசாலை வளாகத்தில் கொந்தளித்தார். குறித்த நோயாளி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சிகிச்சை சேவைகளுக்கு வருபவர்களுக்கு கூட மறு திகதியிட்டு வழங்குவதில்லை.

இதனால் நோயாளிகள் பல சிரமத்தின் மத்தியில் முச்சக்கரவண்டி மற்றும் பேரூந்துகளில் பிரயாணம் மேற்கொண்டு அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றனர்.இதுகுறித்து வைத்தியசாலை பணிப்பாளரை சந்தித்த போதிலும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவுற்றதன் பின்னரே மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியுமென தெரிவித்தார். இன்றுடன் மூன்று தினங்கள் ஆகின்றன. இதற்கு ஓர் முடிவு வரும் என எதிர்பார்தோம்.

ஆனால் இன்றும் முடிவில்லை. நாங்கள் பணிப்புறக்கணிப்பு மேற்கொண்டுள்ளோம். போராட்டம் முடியும் வரை நோயாளர்கள் வர வேண்டாம் என தெரிவிக்கின்றார்களா? இல்லை நோயாளர்களை அலட்சியப்படுகின்றனர். இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.