உயிருக்கு போராடி 12 மணி நேரம் கடலில் நீந்தி கரையை சேர்ந்த அமைச்சர்.!

மடகாஸ்கர் நாட்டிற்கு அருகே நடுக்கடலில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று, இரு தினங்களுக்கு முன் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், கடலோர காவல் படையினர் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும், இந்த விபத்தின் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 64- ஐ தாண்டியதாக கூறப்படும் நிலையில், 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 20 பேரை காணமால் போயுள்ள நிலையில் அவர்களை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக, காவல்துறை மந்திரி செர்ஜ் கெல்லே, (Serge Gelle) ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது, இந்த ஹெலிகாப்ட்டர் மீட்புப் பணி நடைபெறும் பகுதிக்கு மேல் பறந்த போது, திடீரென ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டுள்ளது. மறுகணமே, இந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துள்ளானது.