திருவள்ளூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கயவன் கைது.!

திருவள்ளூர் மாவட்டம் நயப்பாக்கம் அருகே, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

நயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறான். இந்நிலையில், தனது வீட்டிற்கு அடிக்கடி வரும் சிறுமி, அவனது பிள்ளைகளுடன் விளையாடுவது வழக்கம்.

சிறுமி கடந்த சில தினங்களாக அச்சத்துடன் இருப்பதை கவனித்த பெற்றோர்கள், மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்த போது, சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியிடம் விசாரித்தபோது, முனுசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக சிறுமி கூறியுள்ளார்.

Previous articleகணவனுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த தாய், மகளுக்கும் தீ வைத்து தற்கொலை….!
Next articleகாதல் திருமணம் செய்த மகளின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்ற தந்தையால் பரபரப்பு!!