எரிவாயு அடுப்பு வெடித்ததில் இளைஞன் படுகாயம் – மஸ்கெலியா…..!

மஸ்கெலிய நல்லதண்ணி – ஸ்ரீபாத மலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் காஸ் அடுப்பு வெடிப்புச் சம்பவத்தால் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தக நிலையத்தில் (23) உணவு சமைத்துகொண்டிருந்தபோது, காஸ் அடுப்பு ​வெடித்துள்ளது.

இதேவேளை இதில் குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் பலத்த காயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleகாதல் திருமணம் செய்த மகளின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்ற தந்தையால் பரபரப்பு!!
Next articleகிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் வவுனியவில் கொரோனவை மறந்து குவிந்த மக்கள்!