கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் வவுனியவில் கொரோனவை மறந்து குவிந்த மக்கள்!

உலகம் முழுவதும் நாளை கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு கடந்த சில வருடங்களாக முகம் கொடுத்து வந்த நிலையில் மக்கள் கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் பொருள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு வீடுகள் மற்றும் அலுவலகங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரித்து மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸை வரவேற்க ஆயத்தமாகியுள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயங்களில் சிறிய அளவிலான கிறிஸ்து பிறப்பு மற்றும் விசேட நள்ளிரவு திருப்பலிகளுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை மக்களை சுகாதார நடைமுறைகளுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஎரிவாயு அடுப்பு வெடித்ததில் இளைஞன் படுகாயம் – மஸ்கெலியா…..!
Next articleநடுரோட்டில் நபரொருவரை அடித்து துவம்சம் செய்த பொலிஸார்!