இன்று ஹட்டன் பகுதியில் வெடித்துச் சிதறிய எரிவாயு அடுப்பு….!

ஹட்டன் – ருவன்புர பகுதியில் நத்தார் தினமான இன்று எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.

இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்புர பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் அடுப்பு சேதமடைந்துள்ளது. எரிவாயு சிலிண்டரினை ஒரு மாதத்துக்கு முதல் ஹட்டன் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கொள்வனவு செய்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleமட்டக்களப்பு கடற்பகுதியில் மர்ம கப்பலா?
Next articleஇலங்கை சிங்கபூரிடம் கச்சாய் எண்ணெய்யை கடனுக்கு வாங்குகிறது….!