இலங்கை சிங்கபூரிடம் கச்சாய் எண்ணெய்யை கடனுக்கு வாங்குகிறது….!

இலங்கைக்கு கடன் அடிப்படையில் கச்சா எண்ணெய்யை வழங்க சிங்கப்பூர் இணங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க (Sumith Wijesinghe) தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய 180 நாட்களுக்கு கடனை செலுத்தும் இணக்கத்தின் கீழ் சிங்கப்பூரிடம் இருந்து கச்சாய் எண்ணெய் கொள்வனவு செய்யப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆறு கட்டங்களாக இந்த கச்சாய் எண்ணெய் தொகை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

சிங்கப்பூரிடம் இருந்து கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் கச்சாய் எண்ணெய் எதிர்வரும் ஜனவரி மாத நடுப் பகுதியில் கிடைக்கும். இதன் மூலம் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தொடர்ந்தும் இயக்க சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.