கோழி முட்டையின் விலையும் அதிகரிக்கலாம்…!

அரசாங்கம் தலையிட்டு கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர்களை பாதுகாக்காது போனால், மக்கள் இந்த தொழிலில் இருந்து விலகி சென்று விடுவார்கள் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால், எதிர்காலத்தில் நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அந்த சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் (Vijaya Alvis) தெரிவித்துள்ளார்.

அத்துடன் புத்தாண்டு காலத்தில் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு அந்நிய செலாவணி தட்டுப்பாடு, இறக்குமதி கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பன காரணமாக கோழிக்கான தீவன செலவுகள் அதிகரித்துள்ளதால், கோழிப் பண்ணை உரிமையாளர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சிறிய மற்றும் நடுத்தர கோழிப் பண்ணைகளை வைத்திருப்போர் அவற்றை மூடி வருகின்றனர். உற்பதி செலவு அதிகரித்துள்ளமை மற்றும் சந்தையில் நிலவும் ஆபத்தான சூழ்நிலை காரணமாக முதலீடு செய்யும் உற்பத்தியாளர்கள் தயங்கம் காட்டி வருகின்றனர்.