யாழ்.சுன்னாகம் பகுதியில் சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல்….!

யாழ்.சுன்னாகம் – தாவடி பகுதியில் 16 வயது சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருதனார்மடம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் தொலைபேசியில் பேசியபடி சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நேற்றைய தினம் குறித்த சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை பறித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இந்நிலையில், குறித்த சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்ற கும்பலை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Previous articleபோலி நாணயத் தாள்கள் தொடர்பில் இலங்கை மக்களிடம் மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
Next articleகொழும்பு பல்கலையில் சாதனைப் படைத்த தமிழ்ப் பெண்! யாரிந்த வைத்தியர் (Photos)