ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக வருகிறது 100% நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட புதிய தடுப்பூசி….!

சீனாவில் தோற்றம் பெற்றதாக கருதப்படும் கொரோனா வைரஸ் தற்போது உருமாறி உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில் பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எனினும் கொரோனா தடுப்பூசிகள் உருமாறிய ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக குறைந்த செயல்திறனையே கொண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் அமீரகத்தில் ‘சினோபார்ம் சி.என்.பி.ஜி’ என்ற புதிதாக மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முதற்கட்ட பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த தடுப்பூசி குறித்த ஆய்வில் ஏற்கனவே கொரோனோ தடுப்பூசி 2 தவணையும் செலுத்திக்கொண்ட தன்னார்வலர்கள் சிலர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் அந்த ஆய்வின் முடிவில் செயலிழந்த நோய் எதிர்ப்புப்பொருளை கூட இந்த புதிய தடுப்பூசி மீண்டும் 100 சதவீதம் அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதோடு இந்த தடுப்பூசியால் மக்களுக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படாது என்பதை ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகின்றனர். இதன் காரணமாக அமீரகத்தில் ‘சினோபார்ம் சி.என்.பி.ஜி’ தடுப்பூசி மிகவும் பாதுகாப்பான தடுப்பூசியாக அங்கீகாரம் அளிக்கப்பட்டு அவசரகால பயன்பாட்டிற்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் மறுசீரமைப்பு செய்யப்பட்ட புரதம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக இந்த புதிய தடுப்பூசி மருந்து திறம்பட செயல்படும். அதேபோல் ஆய்வில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்புசி செலுத்தப்பட்ட பிறகு உடலின் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனையடுத்தே அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்தே அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.