ஆசியாவின் தலைவாசல் தமிழர் பகுதிக்குள்! சீனாவின் இரகசிய நகர்வால் பேராபத்து…!

சென்னைக்கு கீழிருந்து கன்னியாகுமாரி வரையான கரையோரப் பகுதியை காவேரி படுக்கை என்று சொல்லப்படுகின்றது. மிகவும் கனிம வளங்கள் கூடிய இந்த படுக்கை காங்கேசன்துறையில் துவங்கி புத்தளம் வரையும் இருக்கும். அந்த பிரதேசம் மிகவும் வளம் கூடிய, கனிமங்கள் கூடின பிரதேசம் என சமூகச் செயற்பாட்டாளர் செல்வின் தெரிவித்தார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களுடைய பகுதிகள் அண்மைக்காலங்களாக பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இவற்றின் நிலைகள் தொடர்பிலும் தமிழர் தாயகம் எதிர்நோக்கியிருக்கின்ற ஆபத்து தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் சமூக ஆர்வலர்கள், விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்றைய காலத்தில் வடக்கு – கிழக்கு பகுதியை சர்வதேசம் எப்படிப் பார்க்கின்றது? இப்படியான சூழலில் சர்வதேசத்தின் கால்பதிப்பு குறிப்பாக சீனாவின் வருகையானது தமிழர் சார்ந்த பகுதிகளில் எப்படியான நிலைகளை எதிர்காலத்தில் ஏற்படுத்துவதற்கான ஏதுக்கள் இருக்கின்றது என்பது தொடர்பிலும் அவர் தெளிவாக விபரிக்கின்றார்.