இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் அதிரடி அறிவிப்பு…!


நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளினால் மேற்கொள்ளப்படும் அனைத்து வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களில் 25 வீதத்தை வாராந்தம் மத்திய வங்கிக்கு செலுத்த வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டிசம்பர் 27, 2021 முதல் நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவின்படி, அனைத்து வணிக வங்கிகளும் தங்களுடைய 75 வீத பங்குகளை வைத்திருக்க வேண்டும் மற்றும் மீதமுள்ள 25 வீதம் வாராந்தம் இலங்கை மத்திய வங்கிக்கு விற்க வேண்டும்.இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, வங்கிகளின் நிகர வெளிநாட்டு சொத்துக்கள் ஏற்கனவே எதிர்மறையாக இருப்பதால் மத்திய வங்கியின் உத்தரவு வங்கித்துறையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் பேராசிரியர் ஜனக் குமாரசிங்கவிடம் வினவியபோது,​​ இந்த உத்தரவு நாட்டில் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய மற்றும் இடைப்பட்ட பொருட்களின் இறக்குமதியை மேலும் பாதிக்கும் என சுட்டிக்காட்டினார்.குறிப்பாக இறக்குமதியாளர்கள் வங்கிகள் மூலம் கடன் கடிதங்களை திறப்பதில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.