பேருந்து மீது இனம் தெரியாதவர்கள் கல்வீச்சு தாக்குதல்…!

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாறை – வளத்தாப்பிட்டி பிரதேசத்திற்கும் மல்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் குறித்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றாகச் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇலங்கையில் எற்படும் திடீர் உணவு தட்டுப்பாடுக்கு என்ன காரணம்?
Next articleமன ரீதியான பாதிப்புக்குள்ளான 15 வயது சிறுமி தற்கொலை….!