மன ரீதியான பாதிப்புக்குள்ளான 15 வயது சிறுமி தற்கொலை….!

கருவலகஸ்வெவ, சியம்பலேவ கிராமத்தில் 15 வயது டைய சிறுமியின் சடலம் அவரது வீட்டுக் கிணற்றி லிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைத்தொலைபேசியில் குறுந்தகவல்கள் பரிமாற்றிக் கொண்ட சிறுமி ஒருவர் ஏதோ ஒரு விடயம் தொடர்பில் மன ரீதியான பாதிப்புக்குள்ளான மையால் தனது வீட்டுக் கிணற்றில் குதித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கருவலகஸ்வெவ, டீ.எஸ்.சேனநாயக்க வித்தியால யத்தின் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமியின் தாய் கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் சிறுமியின் கல்வி நடவடிக்காக கையடக்கத் தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது வரை மேற்கொண்ட விசாரணையில் குறித்த சிறுமி கருவலகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனுடன் இரகசிய காதல் தொடர்பு இருந்ததாக தெரிய வந்துள்ளது.

குறித்த இளைஞனுடன் குறித்த சிறுமி கடந்த 28ஆம் திகதி இரவும் 29 ஆம் திகதி காலையிலும் குறுந்தக வல்களைப் பரிமாறி கொண்டிருந்ததாகவும் அதன் பின்னர் ஏதோ ஒரு விடயம் தொடர்பில் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகியிருந்ததாக பொலிஸ் விசாரணை களின் மூலம் உறுதியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபேருந்து மீது இனம் தெரியாதவர்கள் கல்வீச்சு தாக்குதல்…!
Next articleசீன பிரஜைகள் சிலர் இலங்கை யுவதிகளை பாலியல் தொழிலில் இணைக்க முயற்சி….! வெளியான திடுக்கிடும் தகவல்…!