எகிறும் அரிசி விலை! கலக்கத்தில் மக்கள்….!

புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.

சேதன பசளை திட்டத்தின் காரணமாக விவசாயிகள் பாரிய நெருக்கடிகயை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

பிரதான நெற்செய்கை பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் விவசாய நடடிவக்கையில் இருந்து விலகியுள்ளார்கள். இம்முறை பெரும்போக விவசாயத்தில் அதிக விளைச்சலை பெற முடியாது.

விவசாயிகள் தங்களின் சுய தேவைக்காக மாத்திரமே விளைச்சலை மேற்கொண்டுள்ளார்கள். டொலர் நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு தற்போது வரிசையில் நிற்கிறார்கள்.

இந் நிலையில் எதிர்வரும் மாதம் முதல் பொது மக்கள் அரிசியை பெற்றுக் கொள்வதற்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து நாடு பாரிய அழிவை நோக்கி செல்லும்.

இயற்கை காரணிகளினால் அந்த அழிவு ஏற்படாது. அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கை திட்டத்தினால் முழு நாடும் பாரிய அழிவை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.