யாழ்.சாவகச்சோியில் சிக்கிய வயோதிபர்….!

யாழ்.சாவகச்சோி பகுதியில் கஞ்சா பொட்டலம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தொியவருகின்றது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சிறிது சிறிதான கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் கிளாலி – கெற்பேலி பகுதியை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் கைதான நபர் சாவகச்சோி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Previous articleதீ விபத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்த கர்ப்பிணி பெண் …!
Next articleவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி எடுத்த விபரீத முடிவு!