சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று இலங்கை வந்தடைந்தார்….!

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று இலங்கை வந்தடைந்தார்.

இன்று நாடு வரும் அவர் நாளை வரை இங்கு தங்கியிருப்பார் என சீன தூதரகம் அறிவித்துள்ளது. சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவு விழா ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது சில முக்கிய பிரமுகர்களை அவர் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.