வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் கொழும்பில் வேலைக்கு சென்ற நிலையில் மாயம்!!

வவுனியா – இலுப்பைக்குளம் பகுதியிலிருந்து கொழும்பிற்கு தொழில் நிமித்தம் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார். வவுனியா – இலுப்பைக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த மூன்று மாதங்களாக கொழும்பில் தங்கியிருந்து தொழில் புரிந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 6 ஆம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு செல்வதாக தனது நண்பர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டுள்ளதுடன்,தனது வீட்டிற்கும் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தான் வவுனியாவிற்கு வருவதாகவும் கூறியுள்ளார்.

எனினும் அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் கடந்தும் குறித்த இளைஞர் வீட்டிற்கும் வராத நிலையில், இதனையடுத்து அவரது தாயாரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பாலுசுந்தரம் சுதர்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதுடன், அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0767700438 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு அவர்களது குடும்பத்தினரால் கோரப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleசீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று இலங்கை வந்தடைந்தார்….!
Next articleவவுனியாவில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!