வவுனியாவில் இரு பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாக கைது!!

ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்றினை சோதனையிட்ட போது அதில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து ஏ9 வீதி ஊடாக வவுனியா நோக்கி சென்ற சொகுசு காரினை ஈரப்பெரியகுளம் பகுதியில் வைத்து பொலிசார் திடீர் சோதனை மேற்கொண்ட போது குறித்த காரில் 63.84 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அதனை கொண்டு சென்றமை தொடர்பில் அதில் பயணித்த இரு பெண்கள் உட்பட 4 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டர்கள் மதவுவைத்தகுளம் மற்றும் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களுடன் 4 மற்றும் 8 மாதக் குழந்தைகளும் காரில் பயணித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளின் குறித்த 4 பேரையும் நீதிமன்றில் முற்படுத்த ஈரப்பெரியகுளம் பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

Previous articleவவுனியாவில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!
Next articleவவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!