பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதம் விபத்து!

பதுளையில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்து, ஹாலி எல தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளமையால் மலையகத்துக்கான தொடருந்து சேவை பாதிப்படைந்துள்ளது.

இச்சம்பவம் இன்று முற்பகல் 11.10 அளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தொடருந்தை தடமேற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகத் தொடருந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.