கொரோனா தொடர்பில் பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்…..!

பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொறுப்பு, பிள்ளைகள், பெற்றோர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்குமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பொறுப்புடன் நடந்துகொண்டால் மாத்திரமே ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேவேளை பிள்ளைக்கு ‘கொவிட்’ அறிகுறிகள் இருந்தால் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் பாதிக்கப்பட்டால், தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறும் அவர் கூறினார்.

பல முன்னணி பாடசாலைகளில் இடம் குறைந்த வகுப்பறையில் 40 அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்று வருவதாகவும், அவ்வாறான வகுப்பில் உள்ள ஒரு பிள்ளைக்கு ‘கொவிட்’ தொற்று ஏற்பட்டாலும், அதானால் ஏற்படும் அபாயம் அதிகம் எனவும் உபுல் ரோஹண சுட்டிக்காட்டினார்.

Previous articleஇலங்கையில் மின் துண்டிக்கப்படும் நேர விபரம் வெளியானது!
Next articleதனியார் பேருந்துகள் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்!