மின்சார விநியோகத்துண்டிப்பு தொடர்பாக ஜானதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அதிரடி உத்தரவு….!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (gotabaya Rajapaksa) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு விடுத்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (10-01-2022) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜானதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் உத்தரவு தொடர்பான தகவல்களை அமைச்சர் காமினி லொக்குகே வெளியிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மின்சார விநியோகத்தை துண்டிக்காது, மின் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று (10-01-2022) முதல் மின் விநியோக தடையை ஏற்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய காலப்பகுதி மற்றும் நேரம் குறித்து இலங்கை மின்சார சபையே தீர்மானிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

Previous articleகோட்டாபய அரசாங்கம் கவிழ்வது உறுதி! விமல்
Next articleயாழில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மருத்துவ பராமரிப்பு சேவை திட்டம்….!