மஸ்கெலியா வில் குடியிருப்பில் திடீர் தீ விபத்து : முற்றாக எரிந்த வீடு…!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட பிரவுண்ஸ்வீக் தோட்டம் புளும்பீல்ட் பிரிவில் தோட்ட குடியிருப்பில் திடீர் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று (13.01.2022) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலு இந்த திடீர் தீ விபத்தில் 2 வீடுகள் கொண்ட குடியிருப்புகளில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளது.

தீ ஏற்பட்ட போது வீட்டில் எவரும் இல்லையெனவும் அயலவர்கள் கூச்சலிட்டதையடுத்து ஏனையவர்கள் ஓடி வந்து அருகில் இருந்த வீட்டிற்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.இதேவேளை இது தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர்.

தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருவதோடு, தோட்ட நிர்வாகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது.

Previous articleதிடீரென விமானி அறைக்குள் புகுந்த பயணி! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!
Next articleஇந்தியாவிடம் கடன் வாங்கிய இலங்கை எவ்வளவு தெரியுமா ? அதிர்ச்சியில் மக்கள்…!